சென்னையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஏற்றி இருவர் கொலை.. வட மாநில லாரி டிரைவர், கிளீனர் கைது.!

0 2082

சென்னை அடுத்த செங்குன்றத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஏற்றி இருவரை கொலை செய்த வட மாநில லாரி டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

வடபெரும்பாக்கத்தில் லாரி பார்க்கிங் யார்டு அருகே கமலக்கண்ணன், நவீன், குமரன் ஆகிய 3 பேர் மது அருந்திக்கொண்டிருந்த போது அங்கிருந்த லாரியை வடமாநில லாரி டிரைவர் எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது இருத்தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் கண்ணையா, லாரியை வேகமாக இயக்கி 3 பேரும் மீது மோதினார். இதில், கமலக்கண்ணன் உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த மற்ற இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் குமரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கிருந்த சில லாரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments