அமெரிக்கா மருத்துவமனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி.. கொலையாளியை சுட்டு வீழ்த்திய போலீசார்..!

0 2034
அமெரிக்கா மருத்துவமனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி.. கொலையாளியை சுட்டு வீழ்த்திய போலீசார்..!

அமெரிக்கா ஒக்லஹோமா மாகாணத்தில் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 

5 மாடி கட்டிட மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி கொல்லப்பட்டார்.

தம்பதி உள்பட 4 பேர் சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையின் ஒவ்வொரு அறையிலும் சோதனையில் ஈடுபடும் போலீசார் வேறேதும் கொலையாளிகள் உள்ளனரா என்றும் காயமடைந்தவர்களை மீட்டும் வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments