கல்விக்காக உலக அளவிலான புதிய செயலி தொடக்கம் - கங்குலி

0 1872

கல்விக்காக உலக அளவிலான புதிய செயலியை தொடங்கி இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நிறைய மக்களுக்கு உதவும் வகையில் புதியதாக ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் மாலையில் அவர் வெளியிட்ட அறிக்கை பல ஊகங்களை ஏற்படுத்தியது.

அரசியலில் நுழைவதற்காக பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் அதனை செயலாளர் ஜெய்ஷா மறுத்து இருந்தார். இந்த நிலையில் கல்வி செயலியை தொடங்கி இருப்பதாக கங்குலி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments