வீட்டில் அயர்ந்து தூங்கிய 16 வயது சிறுமி.. கழுத்தில் தாலியால் மிரண்ட பெற்றோர்..! ஆட்டோ காதலால் பாய்ந்தது போக்சோ..!

0 4053
வீட்டில் அயர்ந்து தூங்கிய 16 வயது சிறுமி.. கழுத்தில் தாலியால் மிரண்ட பெற்றோர்..! ஆட்டோ காதலால் பாய்ந்தது போக்சோ..!

சென்னை திருமங்கலத்தில் கழுத்தில் தாலியுடன் வீட்டில் தூங்கிய 16 வயது சிறுமி மாயமான நிலையில் கடத்திச்சென்ற ஆட்டோ ஓட்டுனரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், கடந்த 27-ம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் பள்ளி ஒன்றில் படித்து வந்த தனது 16 வயது மகளை காணவில்லை என்றும் எனது மகளை கண்டுபிடித்து தருமாறும் புகாரில் கூறியிருந்தார். மேலும், தனது மகளுடன் சமூக வலைதளம் மூலம் பழகிய நபர் குறித்த தகவலையும் சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதில் 2 மாதத்திற்கு முன்பே சிறுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கழுத்தில் தாலி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் அதுகுறித்து கேட்டுள்ளனர்.

அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய தனது காதலன் குறித்து சிறுமி கூறியதாகவும் அண்ணாநகர் பகுதியில் ஒரு கோயிலில் வைத்து தனது காதலன் தாலி கட்டியதாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த தகவல் வெளியில் தெரிந்தால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நற்பெயர் கெட்டுவிடும் என நினைத்து தாலியை அகற்றிவிட்டு சிறுமியை வீட்டிலேயே பாதுகாப்புடன் வைத்து இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி தனது காதலனை தொடர்பு கொண்டு வீட்டில் எச்சரித்து, மிரட்டி வைத்துள்ள தகவலை கூறியதை அடுத்து சிறுமியின் இன்ஸ்டாக்ராம் காதலன் நேரில் வந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இங்கிருந்து கடத்திச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்தது சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவரது காதலனை கண்டுபிடித்து மேல்மருவத்தூர் பகுதிக்கு சென்ற திருமங்கலம் மகளிர் போலீசார் அங்கு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு அவரது காதலன் 19 வயதான மிளவு அழகன் என்பவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான மிளவுஅழகன் கடந்த இரண்டு வருடமாக இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழகி வந்துள்ளான் . சிறுமியை வீட்டில் இருந்து கடத்திச் சென்று மேல்மருவத்தூரில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை தங்க வைத்து குடித்தனம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் மகளிர் போலீசார் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மிளவு அழகனை புழல் சிறைசாலையில் அடைத்தனர்.

படிக்கின்ற வயதில் தங்கள் பிள்ளைகளின் கைகளில் ஸ்மார்ட் போன் கொடுக்கும் பெற்றோர் , பெண் குழந்தைகளை கவனிக்க தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments