காடு.. மலை.. ஆறு ..கடந்து காதலனை கரம் பிடித்த வங்கத்து சின்ன குயில்..! கிளைமேக்ஸில் போலீஸ் வைத்த டுவிஸ்ட்..!

0 5821
காடு.. மலை.. ஆறு ..கடந்து காதலனை கரம் பிடித்த வங்கத்து சின்ன குயில்..! கிளைமேக்ஸில் போலீஸ் வைத்த டுவிஸ்ட்..!

கையில் பாஸ்போர்ட் இல்லாததால் வங்கதேச பெண் ஒருவர், காடு மலை வழியாக ஆற்றை நீந்தி எல்லையை கடந்து முக நூல் காதலனை கரம் பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

வங்கதேச நாட்டை சேர்ந்த இளம் பெண் கிருஷ்ணா மண்டல். இவர் மேற்குவங்க மாநிலம் நரேந்திரபூரை சேர்ந்த அபிக் மண்டல் என்ற இளைஞருடன் முக நூலில்.நட்பாக பழகி வந்துள்ளார். நட்பு.காதலான நிலையில் இருவரும் சந்தித்துக் கொள்ள இயலாமல் தவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு ரெயில் இயக்கப்பட்டு.வரும் நிலையில் அதில் பயணிக்க பாஸ்போர்ட் அவசியம் என்பதால் கிருஷ்ணா மண்டலால் காதலனை சந்திக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காதலியை தேடிச்சென்று கரம் பிடிக்கும் சினிமா காதலன் போல நிஜத்தில் காதலி கிருஷ்ணா மண்டல் களமிறங்கி உள்ளார்.

சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் விதமாக சுந்தரவனக் காடுகளையும், மலை முகடுகளையும் நடந்தும் ஏறியும் கடந்த கிருஷ்னாமண்டல், மிகவும் ஆபத்தான நதியான மால்டா ஆற்றில் குதித்து ஒரு மணி நேரம் நீந்தி மேற்கு வங்க மாநிலத்துக்குட்பட்ட 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் தான் பத்திரப்படுத்தி கையோடு கொண்டு வந்த செல்போனை பயன்படுத்தி காதலன் அபிக் மண்டலை தொடர்பு கொண்டு அவரது சொந்த ஊரான நரேந்திர பூருக்கு சென்று காதலனை சந்தித்தார்.

தன்மீது கொண்ட உண்மை காதல் காரணமாக காடு மலை நதியை கடந்து வந்த காதலி கிருஷ்ணா மண்டலை ஊரரிய திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தார் அபிக் மண்டல்.

ஊரே கொண்டாட காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடந்த நிலையில் வாழ்த்திபேசிய ஒரு நல்ல உள்ளம், மணமகளின் காதலை புகழ்ந்து பேசுவதாக நினைத்து அவர் எப்படி இரு நாட்டின் எல்லைகளை கடந்து வந்து மணமகன் அபிக் மண்டலை கரம்பிடித்தார் என்பதை சற்று சத்தமாக போட்டு உடைத்ததால், அங்குவந்த போலீசாரின் காதுகளுக்கு இந்த சம்பவம் எட்டியது.

இதையடுத்து சட்டவிரோதமாக நாட்டின் எல்லைகளை கடந்து இந்தியாவிற்குள் புகுந்த இளம் பெண் கிருஷ்ணா மண்டலை கைது செய்து போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

காடு.. மலை.. ஆற்றை கடுமையாக போராடி கடந்து வந்த காதலியை, காதலனிடம் இருந்து எளிதாக பிரித்து அழைத்துச் சென்ற போலீசார், வங்க தேச தூதரகத்திடம் ஒப்படைத்தனர். கிளைமேக்ஸில் போலீசார் வைத்த டுவிஸ்ட்டால் காதலியை பிரிந்து காதலன் தவித்து வருகின்றார்.

உழைக்காமல் கிடைக்கின்ற பொருளாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி எதுவும் நிலைக்காது என்பதற்கு சாட்சியாகி இருக்கின்றது இந்த காட்சிகள்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments