திடீரென பழுதான ஏ.சி.. விஷமாக மாறிய புகை.. ரொம்ப ஹாட்டாக இருக்கு.. கே.கே.வின் கடைசி வார்த்தை..!

0 4210
திடீரென பழுதான ஏ.சி.. விஷமாக மாறிய புகை.. ரொம்ப ஹாட்டாக இருக்கு.. கே.கே.வின் கடைசி வார்த்தை..!

கே.கே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத் திடீர் மறைவு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் மறைவுக்கு பலவித காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியவர் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். தமிழில் காதல் தேசம் தொடங்கி கில்லி, ரெட், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட பல படங்களில் கேகே பாடிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன..

கடந்த இரு நாள்களாக கேகே கொல்கத்தாவில் தொடர்ந்து, இசை நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஹோட்டல் அறைக்கு திரும்பினார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி நடந்த Nazrul Manch அரங்கத்தில் 2,400 பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை காணலாம். ஆனால், கே.கே.வின் இசை நிகழ்ச்சியை காண 7,000 பேர் கூடியுள்ளனர். அரங்கத்துக்கு வெளியேவும் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அந்த ரசிகர்கள் வெளியே நின்று கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். அரங்கத்தில் இருந்த இரு கதவுகளையும் உடைத்துள்ளனர்.

இதனால், அவர்களை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த தீயணைப்பான் புகையை பயன்படுத்தியுள்ளனர். தீயணைப்பானில் இருந்து வெளியான புகை உடைக்கப்பட்ட கதவுகள் வழியாக அரங்கத்துக்குள் சென்று உள்ளே இருப்பவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் தீயணைப்பானை பயன்படுத்தினால் histotoxic hypoxia என்று சொல்லப்படும் ஒரு நிலை மனிதர்களுக்கு ஏற்படலாம்.

அதாவது, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து ரத்த திசுக்கள் விஷமாக மாற வாய்ப்புள்ளது. அரங்கத்தில் ஏ.சியும் முறையாக வேலை செய்யாத நிலையில், கே.கே. மிகுந்த அசவுகர்யமாக காணப்பாட்டார். நிகழ்ச்சியின் போது, ஒரு கட்டத்தில் பாடுவதை நிறுத்திய கே.கே. முகத்தை துணியால் துடைப்பது போலவும் ஏர் கண்டிஷனை சுட்டிக் காட்டி, ரொம்ப ஹாட்டாக இருப்பதாக கூறுவது போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன. உயிரின் உயிரே' பாடல் உள்ளிட்ட தமிழில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய கே.கே. பேசிய கடைசி வார்த்தை இதுதான்.

மேலும் கேகேவின் முகத்திலும், தலையிலும் காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கேகேவின் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும். இந்த நிலையில் கூறாய்வு முடிந்ததும் பாடகர் கேகேயின் உடல் கொல்கத்தா ரவீந்திர சதன் சதுக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு கேகேயின் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments