சாலையில் 8 போட்டால் எமலோகம் கன்பார்ம்.. போதையால் மாறிய பாதை..!

0 2498

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி சென்ற வாலிபர்கள் லாரியில் மோதிய வீடியோ வெளியாகி உள்ளது. போதையால் பாதைமாறி சாலையில் எட்டுபோட்டு எமனை அழைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நடுவலூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் மணி மற்று காங்கமுத்து, நண்பர்களான இருவரும் ஆத்தூரிலிருந்து மதுபோதையில் இருசக்கர வாகனத்தை தன்னிலை மறந்து குறுக்கும் நெடுக்குமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகின்றது.

இருவரும் மது போதையில் இருந்ததால் கட்டுப்பாடில்லாமல் ஒன்சைடு எட்டு போட்ட படியே மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் சென்றனர்

இவர்களின் பாம்பு டிரைவிங்கை , பின்னால் வாகனத்தில் வந்த இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்தவாரே பின் தொடர்ந்துள்ளனர்.

குடி வெறியர்கள் இருவரும் பல சிறு வாகனங்களில் தப்பிய நிலையில் வீரகனூரில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற லாரியின் பக்கவாட்டில் மீது மோதி சாலையில் விழுந்தனர்.

அதற்கு பின்னால் வந்த பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக பிரேக் அடித்ததால் இருவரையும் தேடி ஓடி வந்த எமன் பாதியில் திரும்பிச் சென்றான்.

பலத்த காயங்களுடன் இரு குடி வெறியர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

போதையில் வாகனம் ஓட்டிச்செல்வோர், தாங்கள் விபத்தில் சிக்குவதோடில்லாமல் மற்றவர்களையும் விபத்தில் சிக்கவைத்து விடுகின்றனர் என்று போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments