கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.!

0 2009

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்கச்சென்ற மூதாட்டி, பேரக்குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெருமுக்கல் பகுதியை சேர்ந்த புஷ்பா, தனது மகனின் குழந்தைகளான 16 வயதான வினோதினி 14 வயதான ஷாலினி மற்றும் 8 வயதான கிருஷ்ணன் ஆகியோருடன் அப்பகுதியில் செயல்படாமல் இருந்த கல்குவாரியின் குட்டையில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது நீச்சல் தெரியாமல் 3 பேரக்குழந்தைகளும் நீரில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற மூதாட்டி புஷ்பாவும் நீரில் மூழ்கியதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடல்களை கைப்பற்றிய பிரம்மதேசம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments