கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் குடியிருப்பு பகுதியில் ரகளை-2 புள்ளிங்கோக்கள் அரெஸ்ட்

0 2649

சென்னையை அடுத்த சேலையூரில் கஞ்சா போதையில் பட்டாக்கத்தியால் பொதுமக்களை தாக்கிய வழக்கில், தேடப்பட்டு வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் முத்தாலம்மன் கோவில் தெரு பகுதிக்கு வந்த 12பேர், கிருஷ்ணமூர்த்தி என்பவரை தாக்கியதோடு அப்பகுதியைச் சேர்ந்தவர்களையும் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரும்புலியூரைச் சேர்ந்த விக்னேஷ், ராஜ்மோகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக லிங்க மூர்த்தி என்பவரை இந்த கும்பல் புகைப்படத்துடன் தேடியதும், அதுகுறித்த தகவலை கேட்ட போது கிருஷ்ணமூர்த்தி தெரியாது எனக் கூறியதால் கஞ்சா போதையில் அவரை தாக்கிவிட்டு தப்பியதும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments