தப்பித்த சைக்கிளுடன் பாழுங்கிணற்றில் விழுந்த சைக்கோ ஆசாமி பலி..!

0 2346

திருப்பூர் அருகே தாயையும், இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தொப்பியுடன் சைக்கிளில் தப்பிய வட மாநில சைக்கோ ஆசாமி பாழுங்கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த திருவாரூரை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணையும், அவரது இரு மகன்களையும் கொலை செய்து விட்டு வட மாநிலத்தை சேர்ந்த கொலையாளி ஒருவன் தலைமறைவானான்.

முத்துமாரியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்த அந்த 50 வயது ஆசாமி தலையில் தொப்பியுடன் சைக்கிளில் ஏறி தப்பினான்.

அவனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தேடி வந்தனர். இந்நிலையில், புதன்கிழமை காலை காங்கேயம் படியூர் அருகே உள்ள தண்ணீர் இல்லாத பாழுங்கிணற்றில் சைக்கிளுடன் ஒருவர் சடலமாக கிடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை பார்த்த போது 3 கொலைகளை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அந்த வட மாநில ஆசாமி தான் அது என்பது கண்டுபிடிக்கபட்டது.

அவன் குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்கிற கார்த்தி என்பதும் போலீசுக்கு பயந்து சைக்கிளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூரை அச்சுருத்தி வந்த வட மாநில சைக்கோ கொலையாளி விஷம் அருந்தி கிணற்றுக்குள் விழுந்தானா, அல்லது அவனை வேறு யாராவது கொலை செய்து கிணற்றுக்குள் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments