நகை வியாபாரியிடம் இருந்து 6.6 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் கொள்ளை... கைவரிசை காட்டிய வெள்ளை சட்டை கும்பல்

0 2060

தஞ்சாவூரில், நகை வியாபாரியிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் தங்கம் மற்றும் 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச்சென்ற 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

தஞ்சையை சேர்ந்த மணி என்பவர், பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு ஆர்டர் எடுத்த நகைகளை, அவர் கடைகளில் கொடுத்து வந்த போது, மணியை பின்தொடர்ந்து வந்த வெள்ளை சட்டை அணிந்த 9 பேர் கொண்ட கும்பல், நகை பையை பறித்து சென்றது.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments