சொத்துத் தகராறு காரணமாக தந்தையை அடித்துக் கொன்ற மகன் நீதிமன்றத்தில் சரண்

0 2049

சென்னை வளசரவாக்கத்தில், சொத்துத் தகராறில் தந்தையை கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த முதியவர் குமரேசன் என்பவரை அவரது மகன் குணசேகரன் என்பவனே அடித்து கொன்று கண்டந்துண்டமாக வெட்டி டிரம்முக்குள் அடைத்து, காவேரிப்பாக்கத்தில் உள்ள காலி மனை ஒன்றில் புதைத்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 4 தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த குணசேகரன், பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையில் தலைமறைவான குணசேகரன், போலீசில் சிக்காமல் இருக்க மொட்டை தலையோடு பல்வேறு பகுதியில் உள்ள கோயில்களில் தங்கியிருந்து அன்னதானங்களை சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments