குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு.. 9 பேர் கைது..!

0 2003
குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு.. 9 பேர் கைது..!

சென்னை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், தனக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்த நிலையில், அவரது வீட்டிற்கு வந்த கணவன்-மனைவி 2 பேர் பேசி கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த கும்பல் சுரேஷ்குமாரை தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தொடர்ந்து, கார் பதிவு எண்களை கொண்டு விசாரித்ததில், பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜராஜன் அவரது மனைவி என்பது தெரியவந்தது.

போதை பொருள் விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த சுரேஷ்குமாரின் தம்பியிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக, சிதம்பரத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் ஆட்கள் மூலம் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments