ரூ.350கோடியில் சர்வதேச தரத்துடன் உருவாகும் திருப்பதி ரயில் நிலையம்.!

0 1373

சர்வதேச வசதிகளுடன், 350 கோடி ரூபாய் செல்வில் அமைய உள்ள திருப்பதி ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த ரயில் நிலையம் 23 லிப்ட், 20 எஸ்கலேட்டர், 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிரா, காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரத்துடன் அமையவுள்ள திருப்பதி ரயில் நிலைய பணிகளுக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments