இந்தியா - சீனா இடையே 16 வது சுற்றுப் பேச்சுவார்த்தை.!

0 1093

இந்தியா சீனா இடையிலான ராணுவத் தளபதிகள் மட்டத்திலான 16 வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இருதரப்பு ராணுவமும் மோதிக் கொண்டதில் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சீனா சில பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றது என்ற போதும் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.

இந்நிலையில் இந்தியா- சீனா எல்லை விவகாரங்களுக்கான செயல் குழுவின் 24வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments