டாஸ்மாக் பாரில் லாட்டரி டிக்கட் விற்பனை... தலைமறைவாக இருந்த பார் உரிமையாளர் கைது.!

0 1878

சென்னை அடுத்த திருவொற்றியூரில் உள்ள டாஸ்மாக் பாரில், லாட்டரி டிக்கட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் பார் உரிமையாளரை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.

ஜோஸ்வா என்பவருக்குச் சொந்தமான டாஸ்மாக் பாருக்கு மது அருந்த வருவோரிடம் ஒரு நம்பர் லாட்டரி டிக்கெட் விற்று வந்த சுரேந்தர் என்ற பட்டதாரி இளைஞரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் பார் உரிமையாளர் ஜோஸ்வாவிற்கு தெரிந்தே லாட்டரி விற்பனை நடந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த ஜோஸ்வாவை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments