திருநெல்வேலி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை.!

0 3722

நெல்லை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவருடன் திருப்பூரில் வசித்து வந்த ராமலட்சுமி, கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து நெல்லை மாவட்டம் தெற்கு வாகைகுளத்தில் உள்ள தந்தை வீட்டில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு உடலை கட்டிலுக்கடியில் மறைத்து வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டு வாசலில் ராமலட்சுமியின் கணவர் கல்யாண சுந்தரத்தின் செருப்பு இருந்ததை குழந்தைகள் அடையாளம் கண்டு கூறிய நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments