கோமாவில் நித்தி மாமா.. ரஞ்சிதா சொல்வது என்ன..? சமாதின்னா ஆரோக்கியமாம்..!

0 11764
பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா இறந்து விட்டதாகவும், சமாதியில் இருப்பதாகவும் கோமாவில் இருப்பதாகவும் வேறு வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் நித்தியின் பெயரில் நித்தி பெயரில் மீண்டும் ஒரு அறிக்கை முக நூலில் வெளியாகி உள்ளது.

பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருக்கும்  நித்தியானந்தா இறந்து விட்டதாகவும், சமாதியில் இருப்பதாகவும் கோமாவில் இருப்பதாகவும் வேறு வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் நித்தியின் பெயரில்  நித்தி பெயரில் மீண்டும் ஒரு அறிக்கை  முக நூலில் வெளியாகி உள்ளது. பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றும் ராஜமாதாவாக ரஞ்சிதா மாறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

ஒரு காலத்தில் நான் தான் கடவுள் என வித விதமான கெட்டபுகளில் கிராபிக்ஸ் உதவியுடன் தனது சிஷ்யர்களுக்கு அருள் பாலித்தவர் நித்தியானந்தா..!

7 மணி ஆன பாட்டுப்பாடி ஊரையே கலங்கடிக்கும் பூவே உனக்காக மீசை பாகவதர் போல தினமும் லைவ் பிரசங்கத்தில் பின்னி பெடலெடுத்த நித்தியால் எழுந்து அமரக்கூட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நித்தியின் ஆன்மீக நித்திய பிரசங்கம் நிறுத்தப்பட்டு விட்டது.

இடையில் நித்தி உயிரிழந்து விட்டதாகவும், சமாதியில் இருப்பதாகவும் , கோமாவில் இருப்பதாகவும் மாறுபட்ட தகவல்கள் பரவியது.

ஒவ்வொரு தகவலுக்கும் மறுப்பு தெரிவித்து நித்தி தரப்பில் இருந்து முகனூலில் ஆங்கில அறிக்கை வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் நித்தி கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியானதை மறுத்து நித்தி தரப்பில் வெளியான அறிக்கையில், சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியம். அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை என்றும் தனது சக்திகளின் உயர்ந்த வெளிப்பாடுகளுக்காக உடல் சீரமைக்கிறது எனவும் பதிவிடப்பட்டு உள்ளது.

நித்திக்கு பின்னர் அவருக்கு சொந்தமான பல நூறு கோடி சொத்துக்களையும், ஆசிரமங்களையும் யார் நிர்வாகிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நித்தியின் அத்தனை ஆசிரமங்களையும், பல நூறு கோடி சொத்துக்களைய நிர்வாகிக்கும் ராஜமாதாவாக சாமியாரினி ரஞ்சிதா உருவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

நித்தியின் பாலியல் வழக்குகள் தொடங்கி கைலாசாவுக்கான அனைத்து விதமான கணக்கு வழக்குகள் தொடர்பான பணப்பறிமாற்றம் என அத்தனையும் ரஞ்சிதாவின் கண் அசைவிலேயே நடப்பதாகவும், அதனால் நித்திக்கு பின்னரும் அவரது ஆசிரம செயல்பாடுகள் தொய்வின்றி தொடரும் வகையில் ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் நித்தியின் உடல் நிலை குறித்து வாய்திறக்க மறுத்து மவுனம் காத்து வருகின்றார்.

அதே நேரத்தில் நித்தியானந்தா கைலாசாவில் இறந்து விட்டதை போன்ற மாய தோற்றத்தை உருவாக்கி, வேறு பெயரில் கெட்டப்பை மாற்றி இந்தியாவுக்குள் போலீஸ் லுக் அவுட் நோட்டீஸில் சிக்காமல் நுழைய, பாட்ஷா பட பாணியில் ஆள்மாறாட்ட திட்டம் போட்டு செயல்படுவதாகவும் நித்தி மீது குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments