பென்னாகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தின் மீது மோதி விபத்து.!

0 1648

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த காவலரின் தாய் உயிரிழந்தார்.

ஏரியூரைச் சேர்ந்த விஜயகுமார், சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது மனைவி, தாய் மற்றும் குழந்தைகளுடன் இன்னோவா காரில் ஏரியூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த நிலையில், காலை 6.30 மணியளவில் ஆதனூர் அருகே வந்த போது விபத்து நேர்ந்தது.

இதில் படுகாயமடைந்த காவலரின் தாய் முல்லை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த காவலர் விஜயகுமார், அவரது மனைவி, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments