மாங்காட்டில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை மீட்ட போலீசார்... 10 பேர் கைது.. சொகுசு கார் பறிமுதல்!

0 1446

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை சேலத்தில் மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.

கோவூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை நேற்று மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்திமுனையில் கை, கால்களை கட்டி காரில் கடத்திச் சென்றனர்.

புகாரின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார், செல்போன் சிக்லனை டிராக் செய்து சேலம் ஆத்தூர் பகுதியில் சுரேஷ்குமாரை மீட்டனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சுரேஷ்குமாரின் சகோதரர் கடத்தல்காரர்களிடம் ஒரு கோடி ரூபாய் பணம் வாங்கியிருந்ததாகவும் அந்த பணத்திற்காக சுரேஷ்குமாரை அவர்கள் கடத்தியதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments