சிறிய விமானம் கரடுமுடனான நிலப்பரப்பில் விழுந்து விபத்து.. விமானத்தில் பயணித்த 4 பேர் சடலமாக மீட்பு..!

சிறிய விமானம் கரடுமுடனான நிலப்பரப்பில் விழுந்து விபத்து.. விமானத்தில் பயணித்த 4 பேர் சடலமாக மீட்பு..!
குரோஷியா நாட்டில் சிறிய விமானம், கரடுமுரடான நிலப்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ப்லிட் நகரத்தில் இருந்து ஜெர்மனி நோக்கி புறப்பட்ட செஸ்னா நிறுவனத்தின் விமானம் திடீரென மாயமானது.
அந்த விமானத்தின் ரேடார் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில், ஜாக்ரெப் பகுதிக்கு தெற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த 4 பேரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
Comments