உங்களுக்குத் தொப்பை ஏன் பெரிதாக இருக்கிறது? நகராட்சித் தலைவரிடம் மம்தா பானர்ஜி கேள்வி

0 2226

"உங்களுக்குத் தொப்பை ஏன் இவ்வளவு பெரியதாக இருக்கிறது?" என்று நகராட்சித் தலைவர்  ஒருவரை பார்த்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புரூலியாவில் கட்சியின் நிர்வாக குழுக் கூட்டத்தில் பொதுத்துறை பணிகளில் ஏற்படும் தாமதம் குறித்து அவர் சரமாரியாக கோபத்துடன் வினா எழுப்பிய வண்ணம் இருந்தார். அப்போது Jhalda நகராட்சி தலைவர் சுரேஷ் அகர்வாலை அழைத்து பிரச்னைகள் குறித்து பேச சொன்னார்.

அவர் எழுந்து நின்ற போது அவரது வயிறை பார்த்த மம்தா உங்களுக்குத் தொப்பை ஏன் பெரிதாக இருக்கிறது என்று கேட்டார். அதற்கு சுரேஷ் அகர்வால் தமது உடம்பில் எந்த பிரச்னையும் இல்லை என்று பதிலளித்தார். சூடாக போய் கொண்டிருந்த கூட்டத்தில் மம்தாவின் இந்த நகைச்சுவை கேள்வி சற்று சூட்டை தணிப்பதாக இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments