இரு சக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது ஏறிய பேருந்து சக்கரம்.. தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

0 3548
இரு சக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது ஏறிய பேருந்து சக்கரம்.. தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

தருமபுரி அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி விழுந்த போது பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இலக்கியம்பட்டியைச் சேர்ந்த மாது என்பவர்  நேற்று காலை சொந்த வேலையாக  வெளியூர் சென்று மாலையில் வீடு  திரும்பினார்.

இலக்கியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கரவாகனம் மோதி கீழே விழுந்துள்ளார்.

அப்பொழுது பின்னால் வந்த அரசு பேருந்தின் பின் புற சக்கரம் மாதுவின் தலை மீது ஏறி இறங்கியது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments