சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்...பதற வைக்கும் கேமரா காட்சி..!

0 3418
சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்...பதற வைக்கும் கேமரா காட்சி..!

கேரள மாநிலத்தில் சாலையோரம் நடந்துச் சென்ற பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோழிகோட்டை அடுத்த குத்தமங்கலம் பகுதியில், 3 பெண்கள் சாலையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில், சாலையை கடக்க இருசக்கர வாகனத்தில் இருவர் காத்திருந்தனர். இந்நிலையில், அவ்வழியே வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து நடந்து வந்த பெண் மீது வேகமாக மோதியது.

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments