விண்வெளியில் ஹேர் வாஷ் செய்வது எப்படி?

0 1634
விண்வெளிக்கு சென்று திரும்பிய சீன வீராங்கனை ஒருவர் விண்வெளியில் ஹேர் வாஷ் செய்வது எப்படி என்பது குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

விண்வெளிக்கு சென்று திரும்பிய சீன வீராங்கனை ஒருவர் விண்வெளியில் ஹேர் வாஷ் செய்வது எப்படி என்பது குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மேல்நோக்கி பறந்துகொண்டிருக்கும் தனது தலைமுடியில் ஷேம்பூவை முதலில் போட்டு விட்டு பின்னர் வாட்டர் பேக்கில் (Water pack) இருந்து நீரை ஊற்றினார். பின்னர் டவல் கிளவுஸ்களை கைகளில் மாட்டிக்கொண்டு தலையை துவட்டிவிட்டு, நீரை உலர்த்தும் கேப் ஒன்றை அணிந்துகொண்டார்.

சீனா சொந்தமாக அமைத்து வரும் தியாங்யாங் விண்வெளி நிலைய கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள கடந்த 2021-ம் ஆண்டு ஷென்சோவ் -13 விண்கலம் மூலம் அனுப்பப்பட்டவர்களில் ஒருவரான வாங் யப்பிங் வீராங்கனை இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments