டெல்லியில் திடீரெனப் பலத்த காற்றுடன் பெய்த கனமழை.. பல இடங்களில் வேருடன் சாய்ந்த மரங்கள்..!

0 1730
டெல்லியில் திடீரெனப் பலத்த காற்றுடன் பெய்த கனமழை.. பல இடங்களில் வேருடன் சாய்ந்த மரங்கள்..!

டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தும் முறிந்தும் விழுந்தன.

கடந்த சில நாட்களாகச் சுட்டெரித்த வெயிலால் அனல்காற்று வீசிய நிலையில் திங்கள் மாலையில் திடீரெனக் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வேகமாகக் காற்று வீசியதுடன் மழை பெய்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக இயங்கின.

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல்வேறு சாலைகளிலும் மரங்கள் வேருடன் சாய்ந்தும் முறிந்தும் விழுந்தன. கன்னாட் பிளேசில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மரம் விழுந்தது. காரில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மழை பெய்ததால் டெல்லிக்கு வரவேண்டிய எட்டு விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, சண்டிகர், அகமதாபாத், டேராடூன் நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments