ஒளிய இடமில்லைன்னு போலீஸ் ஸ்டேசனுக்குள்ள ஒளிஞ்சானாம் ஒருத்தன்..! எலியார் பரிதாபங்கள்

0 3219
பெட்டிக்குள் புகுந்து இருப்பதை குதறும் குணம் கொண்ட எலி ஒன்று காங்கிரீட் காலம் பாக்ஸுக்குள் புகுந்து காங்கிரீட் கலவைக்குள் சிக்கிக் கொண்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது

பெட்டிக்குள் புகுந்து இருப்பதை குதறும் குணம் கொண்ட எலி ஒன்று காங்கிரீட் காலம் பாக்ஸுக்குள் புகுந்து காங்கிரீட் கலவைக்குள் சிக்கிக் கொண்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது

பெட்டிகளை பார்த்தால் போதும் உள்ளே நுழைந்து அதில் இருப்பது என்னவாக இருந்தாலும் அவற்றை கடித்து குதறி கந்தல் கோலமாக்குவதில் எலியார் எப்போதுமே புலியார் தான்..!

அந்தவகையில் காண்கிரீட் அமைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த காலம் பாக்சுக்குள் இரவு நேரத்தில் புகுந்து உள்ளே என்ன இருக்கின்றது ? என்று தேடி பார்த்த எலியார் ஒருவர் டயர்டாகி உள்ளேயே உறங்கி விட்டார் போல, அதற்குள்ளாக விடிந்ததும் வேலைக்கு வந்த கட்டிட தொழிலாளர்கள் காலம் பாக்ஸுக்குள் சிமெண்டு காங்கிரீட் கலவையை கொட்ட , தூங்கிக் கொண்டிருந்த எலியார் மேலே வர இயலாமல் சிக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் 2 தினங்கள் கழித்து சுற்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த மரத்துண்டுகளை அகற்றி காண்கிரீட் தூணை பார்த்த போது , தூணுக்கு அடியில் காண்கிரீட்டில் வால் சிக்கிக் கொண்டதால் எலியார் ஒருவர் போர்க்குணத்தோடு 23 புலிகேசி போல போராடிக் கொண்டிருப்பதை காண முடிந்தது.

தன் மீது சிமெண்டு கலவை பட்டாலும் 2 நாட்கள் சாப்பாடின்றி தன்னால் சர்வைவ் பண்ணமுடியும் என்ற நம்பிக்கையோடு அந்த எலி போராடிக் கொண்டிருப்பதாக பார்ப்போருக்கு தோன்றினாலும் எலியின் மைண்ட் வாய்ஸ் என்னவோ தப்பித்தால் போதும் என்பது போலவே இருந்தது.

ஒரு பக்கம் தன்னை சுற்றி நின்று சிலர் செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்து தப்பிக்கபோறாமா..? இல்லை தர்ம அடி வாங்க போறோமா? என்ற பரிதவிப்பு அந்த எலியின் கண்களில் நன்றாக தெரிந்தது

இது எந்த ஊரில் எப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ போன்ற விவரம் ஏதுமின்றி இடம் பொருள் ஏவல் தெரியாமல் உள்ளே புகுந்தால் என்ன மாதிரி நிலை ஏற்படும் என்று இணையத்தில் நகைச்சுவை வசனங்களோடு வைரலாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments