யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

0 1778

2021ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் எழுத்துத்தேர்வு நடைபெற்ற நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

அதன் அடிப்படையில், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்சி பெற்ற 685 பேரின் இறுதிப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளளார். மேலும், கோவையை சேர்ந்த சுவாதி ஸ்ரீ இந்திய அளவில் 42வது இடமும் தமிழக அளவில் முதலிடமும் பிடித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments