கல்விதான் பெண்களின் உரிமை - முதலமைச்சர் பேச்சு

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை என்றும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி என்ஏஏசி அமைப்பிடம் ஏ பிளஸ் பிளஸ் தரச்சான்று பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் கல்விதான் பெண்களின் உரிமை எனத் தெரிவித்தார்.
Comments