வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு கோடி கணக்கிலான பணம் வரவு வைக்கபட்டதாக குறுஞ்செய்தி - வங்கி அதிகாரிகள் விளக்கம்

0 2221

நாடு முழுவதும் எச்.டி.எப்.சி வங்கி கிளையில் இருந்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு கோடி கணக்கிலான பணப் வரவு வைக்கபட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சில எச்டிஎஃப்சி வங்கி கிளைகளின் வங்கி கணக்குகளுக்கு நேற்று 13 கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது.

இந்நிலையில், புதிய சாஃப்ட்வேரை அப்டேட் செய்யும் பணிகளின் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே குறுஞ்செய்தி சென்றதாகவும், பணம் ஏதும் வங்கிக் கணக்கிற்கு செல்லவில்லை எனவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

சென்னையை போல் பெங்களூர் உள்ளிட்ட சில இடங்களிலும் இது போன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், தற்போது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் எச்.டி.எப்.சி வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments