கோவிலின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக யூ டியூபர் கார்த்திக் கோபிநாத் கைது.!

0 7023

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக யூ ட்யூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் பெயரை பயன்படுத்தி இளைய பாரதம் யூடியூப் சேனல் நடத்திவரும் கார்த்திக் கோபிநாத் 36 லட்ச ரூபாய் வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக கோயில் செயலாளர் அரவிந்தன் புகார் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கார்த்திக் கோபிநாத்திற்கு ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், யூ ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments