தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவர் அடித்துக் கொலை... வாழை தோப்பில் புதைத்து 9 மாதம் காணவில்லை நாடகம்

0 4261

கடலூரில் கணவரை கொன்று புதைத்து 9 மாதம் காணவில்லை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

எஸ்.புதுக்குப்பத்தை சேர்நத விஜயலட்சுமிக்கும், மோகன் என்பவருக்கும் தவறான உறவு இருந்ததாகவும், அதை கணவர் ராஜசேகர் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆண் நண்பரின் உதவியுடன் ராஜசேகரை கொன்று வாழைத் தோப்பில் புதைத்து காணவில்லை என விஜயலட்சுமி நாடகமாடியதாக கூறப்படுகிறது. அடிக்கடி ராஜசேகர் குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு வெளியூர் செல்வது விஜயலட்சுமிக்கு காரணம் கூற ஏதுவாக இருந்தது.

இந்நிலையில் ராஜசேகரின் சகோதரர் அளித்த புகாரில் போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து தலைமறைவாக உள்ள ஆண்நண்பர் மோகனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments