பிரபல பாடகரும் காங். பிரமுகருமான சித்து மூஸ் வாலா சுட்டுக் கொலை... 30 தோட்டாக்கள் சுடப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு!

0 1725

பஞ்சாபின் பிரபல மேடை பாடகும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான சித்து மூஸ் வாலா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடிகும்பலின் தலைவன் பொறுப்பேற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சித்துவை நோக்கி 30 தோட்டாக்கள் சுடப்பட்டன.

அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவர் அருகில் நின்றிருந்தவர்கள் சிலருக்கும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரசும் அகாலி தளமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பகவந்த் மன் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் சீரழிந்துவிட்டதாக அகாலி தளக் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments