குடவாசல் அருகே நிலத்தகராறில் தாய் மற்றும் மகன் கடப்பாரையால் குத்திக் கொலை..!

0 1853

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நிலத் தகராறில் தாய் மற்றும் மகனை கடப்பாரையால் குத்திக் கொலை செய்த கொலைக் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செருகளத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் குடும்பத்திற்கும் அவரது அண்ணன் மகன்களான அன்பழகன் மற்றும் செபஸ்டின் குடும்பத்தினருக்கும் இடையே பூர்வீக இடம் தொடர்பாக சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இரு குடும்பத்திற்கும் இடையே சொத்து காரணமாக தகராறு ஏற்பட்டதில் அண்ணன் மகன்கள் இருவரும் அருகில் இருந்த கடப்பாறையால் தாக்கியதில் பாஸ்கரின் மனைவி அலங்கார மேரி மற்றும் மகன் அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments