தீப்பொறி பறக்க சியர் கேர்ள்ஸுடன் அண்ணாச்சி அரங்கேற்றம்.. ரஜினி, விஜய் தான் ரோல் மாடலாம்.!

0 4346

தன்னை விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துகள் கூறி முன்னோட்ட வெளியீட்டு மேடையில் தீப்பொறி பறக்க விட்ட லெஜெண்ட் சரவணன், தான் சினிமாவில் நடிப்பதற்கு ரஜினி விஜய் ஆகியோர் தான் இன்ஸ்பிரேசன் என்றார்.

இந்தியாவின் முன்னணி நாயகிகள் வாழ்த்த.... தீப்பொறி பறக்க தி லெஜண்ட் ஆடியோ மற்றும் முன்னோட்ட மேடையை தெறிக்கவிட்டார் அண்ணாச்சி சரவணன்..!

முன்னதாக செய்தியாளர்களிடம் தான் நடிப்பதற்கு இன்ஸ்பிரேசனே ரஜினிகாந்தும், விஜய்யும் தான் என்று பெருமையாக கூறிய சரவணன் தன்னை விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்

தி லெஜண்ட் படம் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் உருவாகி உள்ளதால், 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்படுவதாக பெருமை தெரிவித்தார்

விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னா, சினிமாவில் நடிப்பது லெஜண்ட் சரவணனுக்கு நீண்டகால விருப்பமாக இருந்தது அது நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவருடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு தான் இப்போது எல்லா படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை என்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றேன் என்றார்

நடிகர் நாசர் பேசும் போது, நடிகர்சங்க கட்டிடம் கட்டுவதற்கு 3 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் சரவணன் என்றும் அந்த பணம் ஆயிரம் குடும்பங்களின் பசியை போக்குவதாகவும் பாராட்டினார்

தி லெஜண்ட் படத்திற்கு முதலில் இசை அமைக்க மறுத்ததாகவும், ஹாலிவுட் படத்திற்கு இணையான கதை என்பதால் இசை அமைக்க ஒப்பு கொண்டதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்தார்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் விஞ்ஞானியாக நடித்தது போல இந்த படத்தில் சரவணன் விஞ்ஞானியாக நடிப்பதாக கூறப்படுகின்றது.

விழாவில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ராய் லட்சுமி, யாசிகா, ஊர்வசி ரவுட்டேலா உள்ளிட்ட 9 முன்னணி நாயகிகள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments