பிரேசில் நாட்டில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு... பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு.!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டி தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால், ஆறுகள் பலவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி குடியிருப்பு பகுதிகளை சூழந்ததால், ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின.
பெர்னாம்பகோ மற்றும் அலகோவாஸ் மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
Comments