பஞ்சாப்பில் காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூஸ்வலா சுட்டுக் கொலை..!

0 1936
பஞ்சாப்பில் காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூஸ்வலா சுட்டுக் கொலை..!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகரும் பாடகருமான சித்து மூஸ்வலா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று மாலை மான்சா மாவட்டத்தில் உள்ள ஹவஹர்கே என்ற கிராமத்தில் தனது காரில் சித்து மூஸ்வலா சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில், சித்து உயிரிழந்த நிலையில், அவருடன் காரில் பயணித்த 2 பேர் படுகாயமடைந்தனர். சித்து உள்ளிட்ட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு நேற்று திரும்பப் பெற்ற நிலையில், அடுத்த நாளே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், சித்து மூஸ்வலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பக்வந்த் மான், கொலை நிகழ்வில் தொடர்புடையவர்கள் தப்பிக்கமுடியாது என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments