அயோத்தி நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி விபத்து.. ஓட்டுநர் உட்பட 7 பேர் பலி - 9 பேர் படுகாயம்..!

0 2383
அயோத்தி நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி விபத்து.. ஓட்டுநர் உட்பட 7 பேர் பலி - 9 பேர் படுகாயம்..!

உத்திர பிரதேச மாநிலம் பஹ்ரைச்-லக்கிம்பூர் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து அயோத்தி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. மோதிபூரில் உள்ள மார்க்கெட்டில் எதிர்புறத்தில் பேருந்து சென்றதால், இந்த விபத்து நேர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் தப்பியோடிய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments