ஏழைச் சிறுமிகளின் கல்விக்கும் நலனுக்கும் பாடுபடும் ராம் பூபால் ரெட்டி ஓர் தன்னலமற்ற தொண்டர்.. பிரதமர் மோடி பாராட்டு..!

0 1722
ஏழைச் சிறுமிகளின் கல்விக்கும் நலனுக்கும் பாடுபடும் ராம் பூபால் ரெட்டி ஓர் தன்னலமற்ற தொண்டர்.. பிரதமர் மோடி பாராட்டு..!

ஆந்திரத்தைச் சேர்ந்த ராம் பூபால் ரெட்டி என்பவர் ஓய்வுக்குப் பின் ஈட்டிய வருமானத்தில் 25 இலட்ச ரூபாய்க்கு மேல் ஏழைச் சிறுமிகளின் நலனுக்காகச் செலவிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மர்க்காபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த ராம் பூபால் நூறு சிறுமிகளுக்கு அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு, வங்கிக் கணக்குத் தொடங்கி அவற்றில் 25 இலட்ச ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

இவர் போல் நாடு முழுவதும் எண்ணற்றோர், ஊருக்கு உழைப்பதே யோகம் என்பதை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகத் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments