காலணிக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு.. சரியான நேரத்தில் பாம்பு இருந்தது கண்டறியப்பட்டதால் உயிர்தப்பியது..!

0 2726
காலணிக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு.. சரியான நேரத்தில் பாம்பு இருந்தது கண்டறியப்பட்டதால் உயிர்தப்பியது..!

கர்நாடக மாநிலத்தில் நாகப்பாம்பு ஒன்று காலணிக்குள் பதுங்கியிருந்த நிலையில், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் அதனை அணிய முயன்றவரின் உயிர்தப்பியது.

அம்மாநிலத்தின் தும்கூருக்கு அருகே உள்ள ரங்காபூர் என்ற கிராமத்தில் ரங்கநாத் என்பவர், வெளியே செல்வதற்காக தனது காலணியை அணிய முயன்றார்.

அப்போது காலணியில் இருந்து ஒருவித ஓசை எழுந்ததை அடுத்து அதனை சோதனையிட்ட அவர், அதில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை அடுத்து, பாம்பு பிடிக்கும் ஒருவரிடம் தகவல் தெரிக்கப்பட்ட நிலையில், அந்த பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments