ஆதார் அட்டையின் நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் - மத்திய அரசு

ஆதார் அட்டையின் நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் - மத்திய அரசு
ஆதார் அட்டையின் நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக, முக்கிய விவரங்கள் மறைக்கப்பட்ட 'மாஸ்க்ட்' ஆதார் அட்டையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைசி 4 எண்களை மட்டும் காண்பிக்கும் வகையிலான அந்த 'மாஸ்க்ட்' ஆதார் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இல்லாத விடுதிகள், திரையரங்குகள் போன்றவை ஆதார் விவரங்களை பெறவோ, அதனை நகலெடுக்கவோ அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments