113வது பிறந்த நாளை கொண்டாடிய உலகிலேயே மிக வயதான நபர்..!

0 2417
113வது பிறந்த நாளை கொண்டாடிய உலகிலேயே மிக வயதான நபர்..!

வெனிசுலாவின் தச்சிரா மாநிலத்தில் உலகிலேயே மிக வயதான மனிதரான ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, தனது 113 வது பிறந்த நாளை தேவாலயத்தில் கொண்டாடியுள்ளார்.

உலகின் மிக வயதான நபர் என கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற பெரெஸ் மோராவுக்கு 41 பேரக்குழந்தைகள்,18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இசை, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறந்தநாள் கூட்டத்தில் அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments