இளம் பெண்களை வசியம் செய்து பணத்தை பறித்துச் செல்லும் போலி ஜோதிடர்கள்.!

0 4751

செய்யாறில் இளம்பெண்கள் பணிபுரியும் கடைகளை நோட்டமிட்டு அவர்களை வசியம் செய்து, போலி ஜோதிடர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காந்தி சாலையில் உள்ள மூட்டுவலி மருத்துவமனையின் மெடிக்கலுக்கு காவி வேட்டி அணிந்து கொண்டு கையில் துணிப்பையுடன் யாசகம் பெறுவது போல வந்த 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

அங்கிருந்த பெண் ஊழியர்கள் அவர்களிடம் 10 ரூபாய் கொடுத்த நிலையில், வருமானத்தை பெறுக்க வழி செய்வதாக கூறி அவர்கள் பெண்களிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.

பேசிக் கொண்டிருந்த போதே பெண்கள் சுய நினைவை இழந்ததாக கூறப்படும் நிலையில், மர்ம நபர்கள் கேட்ட படி கல்லாவில் இருந்த 1,200 ரூபாய் பணத்தை எடுத்து ஊழியர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், தான் கழுத்தில் அணிந்திருக்கும் ருத்திராட்சத்தில் 3 தேவதைகள் இருப்பதாக கூறி நம்ப வைத்த மர்ம நபர்கள் மந்திரம் கூறுவது போல் நடித்து, பெண் ஊழியர்கள் மெய்மறந்த நிலையில் இருந்த போது பணத்துடன் வெளியே சென்றுள்ளனர்.

10 நிமிடங்களுக்கு பிறகே பெண் ஊழியர்களுக்கு சுய நினைவு வந்ததாக கூறப்படும் நிலையில், மக்கள் உஷாராக இருக்குமாறு கூறி மருத்துவமனை உரிமையாளர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments