ஓராண்டில் மட்டும் 102 டன் அளவிலான போதை பொருட்கள் பறிமுதல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 102 டன் அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அண்டை மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க எல்லைகளில் சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Comments