ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

0 2115
ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

கோவையில் பிரபல ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் இரண்டாம் நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 8 ஹோட்டல்கள், 5 வீடுகள், உணவக உரிமையாளரின் நெருங்கிய உறவினர் வீடுகள் என மொத்தம் 25 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.

அதில் 20 இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், இரண்டாம் நாளாக இன்று 5 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உணவகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments