ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் ராணுவத்தின் ரகசிய ட்ரோன்.!

0 3161

ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் ராணுவத்தின் ரகசிய ட்ரோன் தளத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.

ஷாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் தாக்குதல், உளவு, உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நூறு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளுடன் அணிவகுத்து நிற்கின்றன.

ஏமன் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சிரியா மற்றும் லெபனான் ஹெஸ்புல்லா அமைப்புக்கு தீவிரவாத பணிகளை மேற்கொள்ள தாக்குதல் ட்ரோன்களை ஈரான் சப்ளை செய்வதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஈரான் ராணுவத்தின் ரகசிய ட்ரோன் கிடங்கின் வீடியோ வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments