கிறிஸ்தவ ஆலயத்தில் கூட்ட நெரிசல் ; குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

0 1605
கிறிஸ்தவ ஆலயத்தில் கூட்ட நெரிசல் ; குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.

தென்கிழக்கு நகரமான போர்ட் ஹார்கோர்ட்டில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேவாலயத்தில் உணவு பெற வந்த நூற்றுக்கணக்கான மக்கள், சிறிய வாசல் வழியே முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments