பெர்முடா முக்கோணம் சுற்றுலா செல்வோருக்காக விளம்பரம்.. முழுப் பணத்தைத் திருப்பித் தருவதாக ஏஜன்சி உறுதி.!

0 1852

பெர்முடா முக்கோணப் பகுதிக்கு சொகுசுக் கப்பலில் சுற்றுலா அழைத்துச் செல்லும் டிராவல் ஏஜன்சி ஒன்று கப்பல் மாயமாக மறைந்துவிட்டால் முழுப்பணத்தையும் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளது.

வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள வரையறுக்கப்பட்டப் பகுதியான பெர்முடா முக்கோணத்தில் நிறைய விமானங்களும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வாழ்நாள் சலுகையாக அந்த டிராவல் நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில், கவலைப்படாதீர்கள், இந்த பெர்முடா முக்கோணப் பயணத்தில் எதிர்பாராதவிதமாக மாயமாகி விட்டால் உங்கள் பணம் திருப்பித் தரப்படும் என்று அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments