பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

0 2205
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாமகவின் புதிய தலைவர் அன்புமணிக்கும், அவரைத் தேர்வு செய்துள்ள அவரது கட்சித் தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், அன்புமணியின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments