முன்விரோதத்தால் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ரௌடி.. 9 பேர் கைது

0 2259
முன்விரோதத்தால் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ரௌடி.. 9 பேர் கைது

சென்னை அம்பத்தூரில் முன்விரோதத்தில் ரௌடி ஒருவனை சக ரௌடிகள் விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

25 வயதான உதயகுமார் தனது தாயை பார்ப்பதற்காக சண்முகபுரம் வந்த போது அவரை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. சில தினங்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமாரின் கூட்டாளி ஒருவனை சிலர் தாக்கியதாகவும் அதனை உதயகுமார் தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments